
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரானது கடந்த நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது பலிரவு ஆட்டமாக டிசம்பர் 06ஆம் தேதி அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்துள்ளார். முன்னதாக குழந்தை பிறப்பின் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா விலகிய நிலையில், ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினர்.
தற்சமயம் ஆஸ்திரேலியா சென்றடைந்த ரோஹித் சர்மா இந்திய அணியுடன் இணைந்துள்ளதால் அடுத்த போட்டியில் இருந்து அவர் மீண்டும் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன்,அணியின் தொடக்க வீரராகவும் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேஎல் ராகுல் எந்த வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.