
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கு வந்துள்ள நியூஸிலாந்து அணிவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது. இதையடுத்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று நியூசிலாந்து அணி உடன் ஜார்கண்ட் ராஞ்சி மைதானத்தில் மோதிய போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்தப் போட்டிக்கு, 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ள அதிரடி துவக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷாக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக ஒருநாள் கிரிக்கெட் இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வரும் கில்லுக்குத் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது.
இதுகுறித்து கருத்து கூறிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, கில் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பதாலும் அவருக்கு டி20 போட்டியில் முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அதனால் அவருக்கு இன்னும் சில வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என்றும் அதனால் அவரே விளையாடுவார் என்றும் தெரிவித்தார்.