1-mdl.jpg)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் இளம் வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் இஷான் கிஷன் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தில் தொடருகிறார். இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் லஸ்ஸி வான்டெர் டுசென் தொடருகிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் ஷுப்மான் கில் உள்ளார். நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் கில் ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 750 புள்ளிகளுடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 10ஆவது இடத்தில் தொடருகிறார். பல்லேகலேயில் நடந்த பாகிஸ்தானுடனான ஆட்டத்தின் போது கிஷன் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் அடித்தார். இதன்மூலம் தரவரிசையில் 12 இடங்கள் உயர்ந்து தற்போது 24ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.