சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான பயிற்சியில் ஷுப்மன் கில் - வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மான் கில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் சரமா நீடிக்கும் நிலையில், அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு காயத்தில் இருந்து மீண்டுள்ள குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதசமயம் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Trending
இதனையடுத்து இத்தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஷுப்மான் கில் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனது பயிற்சியைத் தொடங்கியுள்ளார். அவர் தற்போது சண்டிகரில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில் அவர் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளிகள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.
முன்னதாக அவர் சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அதில் முதல் இன்னிங்ஸில் சோபிக்க தவறிய ஷுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனையடுத்து எதிர்வரு, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் அவர் தற்போது மொஹாலியில் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
“Shubman Gill painting the field with his strokes! Pure timing, precision, and class at PCA Mohali pic.twitter.com/PFmbcWQrqY
— Punjab Cricket Association (@pcacricket) February 1, 2025முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து பேசிய ஷுப்மன் கில் " இத்தொடரில் விளையாடவது குறித்து ஆர்வமுடன் இருக்கிறேன். ஏனெனில் இது நான் சிறுவயதில் எப்போதும் கனவு காணும் ஒன்று இது. நான் ஒரு ஐசிசி தொடரில் கோப்பையை வெல்லவதற்கு அருகில் வந்துள்ளேன். தோல்வி என்பதற்கு இங்கு இடமில்லை. மேலும் இத்தொடரில் உலகின் முன்னணி அணிகள் விளையாடவுள்ளதால், நிச்சயம் கடினாமாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் அதற்காக நான் உற்சாகமுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து & சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஹார்டிக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா (இங்கிலாந்து தொடரில் மட்டும்).
Win Big, Make Your Cricket Tales Now