
இந்தியா - ஆஃப்கானிஸ்தான அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்தியா பந்து வீசும் என அறிவித்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் விளையாடாத நிலையில், ஷுப்மன் கில், ஷிவம் துபே விளையாடும் வாய்ப்பை பெற்றார்கள்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 29 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அக்ஸர் படேல் மற்றும் முகேஷ் குமார் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதற்கு அடுத்து இந்திய அணிக்கு தொடக்கம் தருவதற்கு ஷுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் களத்திற்கு வந்தார்கள். முதல் ஓவரை சந்தித்த ரோகித் சர்மா பரூக்கி வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தை நேராக அடித்து ரன்னுக்கு ஓடி வந்தார். அந்த நேரத்தில் ரோஹித் சர்மாவை பார்க்க வேண்டிய கில் திரும்பி பந்தை ஃபீல்டர் பிடிக்கிறாரா என்று வேடிக்கை பார்த்தார்.
Rohit gone for duck
— Flash (@F1ash369) January 11, 2024
Full drama on second ball....pic.twitter.com/gGSLr4jJGF