
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நேற்று முந்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த உலகக் கோப்பை தொடரினை அற்புதமாக துவங்கியுள்ளது. அடுத்ததாக நாளை ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி மைதானத்தில் விளையாடயிருக்கிறது.
இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்ட ஷுப்மன் கில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் டெங்கு காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. அவர் முழுஉடற்தகுதி பெறாததால் முதல் போட்டியை தவறவிடுவதாக ரோஹித் சர்மா அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் டெல்லி சென்ற இந்திய அணியுடன் ஷுப்மன் கில் பயணிக்கவில்லை என்றும் அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.