
கடந்த 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் கோப்பை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இம்முறை 2023ஆம் ஆண்டு முழுக்க முழுக்க இந்தியாவில் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இம்முறை நிச்சயம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். அதோடு இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு பலமான அணியாக பார்க்கப்படுவதால் நிச்சயம் இந்த உலகக் கோப்பை நமக்கு தான் என்று ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக அணியில் இடம் பெற்றுள்ள ஷுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க தயாராகி வருகிறார். இந்நிலையில் முதன் முறையாக இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட இருப்பது குறித்து ஷுப்மன் கில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.