ஐசிசி தரவரிசையில் முன்னேறிய ஷுப்மன் கில்!
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய இளம் பேட்டர் ஷுப்மன் கில் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான 3ஆவது ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியிருக்கிறது இந்தியா. இந்தியாவின் ஷுப்மன் கில் ஆட்டநாயகன், தொடர்நாயகன் ஆனார்.
சிறப்பாக விளையாடிய 22 வயது ஷுப்மன் கில், 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 பந்துகளில் 1 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடித்தார். இது அவருடைய முதல் ஒருநாள் சதம்.
Trending
ஜிம்பாப்வே நாட்டில் அதிக ஒருநாள் ரன்களை எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஷுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், 1998இல் 127* ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அச்சாதனையை ஷுப்மன் கில் தாண்டியுள்ளார்.
இதன் காரணமாக ஒருநாள் தரவரிசையில் ஷுப்மன் கில் முன்னேற்றம் அடைந்துள்ளார். சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் அவர் 38ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பாகிஸ்தானின் பாபர் ஆசாம் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 5ஆவது இடத்திலும் ரோஹித் சர்மா 6ஆவது இடத்திலும் உள்ளார்கள்.
Win Big, Make Your Cricket Tales Now