Advertisement

யாரும் நீக்க முடியாத கேப்டனாக வலம் வர விராட் கோலி நினைத்தார் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan January 17, 2022 • 13:27 PM
 Since Virat Kohli has stepped down suddenly, Rohit Sharma will be India’s next Test captain: Sanjay
Since Virat Kohli has stepped down suddenly, Rohit Sharma will be India’s next Test captain: Sanjay (Image Source: Google)
Advertisement

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி திடீரென விலகினார். அவரது விலகல் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், “குறுகிய கால இடைவெளியில் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக விராட்கோலியின் வாழ்க்கையில் நடந்து விட்டது. முதலில் ஐபிஎல் தொடரின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

Trending


அதன் பின்னர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து அவர் விலகியது யாரும் எதிர்பாராதது. முக்கியமான பொறுப்புகளில் இருந்த கோலி குறுகிய இடைவெளியில் வெளியேறி விட்டார்.

இந்திய கிரிக்கெட்டில் யாரும் நீக்க முடியாக கேப்டனாக வலம் வர வேண்டும் என்று கோலி விரும்பினார். அதனால் தான் அந்த முடிவை கிரிக்கெட் வாரியம் எடுக்கும் முன் தாமாகவே கேப்டன் பதவியை கோலி ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் அனைவருக்கும் புனிதமானது என்று நான் நினைக்கிறேன். எனவே, அவர்கள் உடனடியாக ரிஷப் பந்திடமும், கேஎல் ராகுலிடமும் செல்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

அப்பதவியை ரோஹித் சர்மா பெறுவார், மேலும் இந்த வீரர்கள் அனைவரும் காத்திருப்பு கேப்டன்களாக இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement