ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி 2023: கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்; உலகக் கோப்பை கேப்டனுக்கே இடமில்லை!
ஐசிசி 2023ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்பட 6 வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகளைக் கொண்டு ஆண்டின் சிறந்த டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை அறிவித்து வருகிறது. அந்தவகையில், 2023ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட உருவாக்கப்பட்ட ஆண்டின் சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை திறம்பட வழிநடத்தி இறுதிப்போட்டி வரை அழைச்சென்ற ரோஹித் சர்மா, ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர்த்து இந்திய அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், விராட் கோலி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது ஷமி ஆகியோருக்கும் இடம் கிடைத்துள்ளது.
Trending
மேலும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட், ஆடம் ஸாம்பா ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். இதுதவிர கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் சிறந்த விளங்கிய நியூசிலாந்தின் டெரில் மிட்செல், தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சென் ஆகியோரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.
அதேசமயம் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பட் கம்மின்ஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும், முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலே சாதனைகளை குவித்த நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ICC ODI Team Of 2023!
— CRICKETNMORE (@cricketnmore) January 23, 2024
6 Indians Makes The List, Rohit Sharma Named Captain #India #TeamIndia #WorldCup2023 #CWC23 #RohitSharma #ViratKohli #ShubmanGill #Shami #Kuldeep #Siraj pic.twitter.com/DoB1UvPO67
ஐசிசி ஆண்டின் சிறந்த ஒருநாள் அணி 2023: ரோஹித் சர்மா (கேப்டன், இந்தியா), ஷுப்மன் கில் (இந்தியா), டிராவிஸ் ஹெட்(ஆஸ்திரேலியா), விராட் கோலி (இந்தியா), டெரில் மிட்செல் (நியூசிலாந்து) ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சென் (தென் ஆப்பிரிக்கா), ஆடம் ஸாம்பா (ஆஸ்திரேலியா), குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் (இந்தியா).
Win Big, Make Your Cricket Tales Now