
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில், அண்மையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் ஓபனிங்கில் இறங்கி விராட் கோலி சதமடித்தது, அவரையே ரோஹித்துடன் ஓபனிங்கில் இறக்கலாம் என்ற கருத்து வலுத்துவருகிறது.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் விராட் கோலி ஓபனிங்கில் அபாரமாக விளையாடியிருப்பதால் தான் இந்த வலியுறுத்தல் வலுக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் கோலியை ஓபனிங்கில் இறக்கலாம் என்று கருத்து கூறியிருக்கின்றனர்.