
Sri Lanka ODI squad: வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணியில் நட்சத்திர வீரர்கள் வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, குசால் மெண்டிஸ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கொழுபுவில் நடைபெற்று வருகிறறது.
இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நிலையில் இத்தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. மெஹிதி ஹசன் தலைமையிலான இந்த வங்கதேச அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள முஷ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் டஸ்கின் அஹ்மத் ஆகியோருடன் டி20 அணியின் கேப்டன் லிட்டன் தாஸுக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.