
Bangladesh T20 squad: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமாஅன நஜ்முல் ஹொசைன் சாண்டோ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேச அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான இந்த டி20 அணியில் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான நஜ்முல் ஹொசைன் சாண்டோ நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் பாகிஸ்தான், யுஏஇ டி20 தொடர்களில் விளையாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.