
நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியுற்ற அந்த அணி 2ஆவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ் தொடருக்கு பின்னர் அந்த அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆட உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனான நியூசிலாந்து அணி இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் ஆட வாய்ப்புகள் அதிகமா உள்ளன. அதே வேளையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கை அணிக்கும் ஒரு சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது. அதற்கு முதலாவதாக அந்த அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதலில் முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன் பின்னர் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்குள் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இலங்கை அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு முடிவாகும்.