முழு உடற்தகுதியை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்; இலங்கை தொடரில் விளையாடுவது உறுதி!
பிக் பாஷ் லீக்கின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்தாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
Trending
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னரே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி ஒன்று வெளியானது. அதன்படி, அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நடைபெற்று வரும் பிக் பேஷ் லீக் தொடரின் போது முழங்கையில் கயமடைந்ததாகவும், இதனால் எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ஸ்டீவ் ஸ்மித் முழு உடற்தகுதியுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் துபாயில் நடைபெறும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சி முகாமிலும் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த வார இறுதியில் ஸ்டீவ் ஸ்மித் தனது பேட்டிங் பயிற்சியை தொடங்குவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், “பிக் பாஷ் லீக்கின் போது வலது முழங்கையில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் இன்று சிறப்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்ந்து துபாய் செல்ல அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டுக்கான தயாரிப்பைத் தொடங்க ஸ்மித் இந்த வார இறுதியில் பேட்டிங்கிற்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளது. இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை பூர்த்தி செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
Win Big, Make Your Cricket Tales Now