-mdl.jpg)
Smriti Mandhana & Harmanpreet Kaur Earn Nominations For ICC Women's Player Of The Month (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்ஸர் படேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.