
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 29ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள் அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா அரை சதம் கடந்ததுடன் 59 ரன்களையும், அணியின் நட்சத்திர வீரர்கள் ரியான் ரிக்கல்டன் 41 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களையும், நமன் தீர் 17 பந்தில் 38 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 89 ரன்களையும், அபிஷேக் போரால் 33 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.