-mdl.jpg)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளனர்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்ரு சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கெதிராக தென் ஆப்பிரிக்க அணி விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதில் 4 அறிமுக வீராங்கனைகள் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர்.