
இளம் வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 171 ரன்கள் குவித்து பல்வேறு சாதனைகளை படைத்தார். அறிமுக போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான், ப்ரிதிவி ஷா ஆகியோருக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் 3ஆவது வீரர் ஆகிறார்.
தற்போது 21 வயதே ஆகும் இவர், இன்னும் பல சதங்கள் படைத்து சாதனைகளைப் படைப்பார் என்கிற எதிர்பார்ப்பு பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இவருக்கு பல்வேறு வீரர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி தன்னுடைய ஆதரவை தெரிவித்து ஜெய்ஸ்வால் 50 ஓவர் உலககோப்பையில் ஆடினால் கூடுதல் சிறப்பு என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், “அறிமுக போட்டியில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதை இளம் வயதில் ஜெய்ஸ்வால் செய்திருக்கிறார். அவருடைய மனவலிமை மற்றும் டெக்னிக் மிகச்சிறப்பாக இருக்கிறது. மேலும் அறிமுக போட்டியில் சதம் அடிப்பது எவ்வளவு சிறப்பு என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் நானும் அறிமுக போட்டியில் சதம் அடித்துள்ளேன்.