
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர விராட் கோலி தன்னுடைய ஐம்பதாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி பாராட்டி பேசியுள்ள முன்னாள் கேப்டன் கங்குலி, “இனி இது போன்ற ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியுமா என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. அதுவும் விராட் கோலி இன்னும் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடிக்கவில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவருக்கு தற்போது 35 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய நாட்கள் இந்தியாவுக்காக விளையாடுவார்.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும். என் வாழ்க்கை முழுவதும் நான் சச்சின் டெண்டுல்கர் கூடவே விளையாடி இருக்கிறேன். சச்சின் டெண்டுல்கர் 49 சதத்தை அடித்தபோது நாங்கள் அனைவரும் இது ஒரு மிகப்பெரிய சாதனை யாரையும் முறியடிக்க முடியாது என்று நினைத்தும். ஆனால் விராட் கோலி அதனை செய்து காட்டியிருக்கிறார். அதுவும் இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி ஆடிய ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது.