
Zimbabwe vs South Africa 2nd Test Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் வியான் முல்டர் முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முற்சதமும் விளாசியதுடன் மொத்தமாக மூன்று இன்னிங்ஸிலும் சேர்த்து 265 என்ற சராசரியில் 531 ரன்களையும் குவித்து அசத்தினார். இதன்காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும், இந்த டெஸ்ட் தொடருக்கான தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார்.