ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் லாரா; பின்னடை சந்தித்த ஸ்மிருதி!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வார்ட் ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி தென் ஆப்பிரிக்க அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது மகளிர் ஒருநாள் வீராங்கனைகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வோல்வார்ட் 3 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரி, ஒரு சதம், ஒரு அரைசதத்தை விளாசியதன் மூலம் இந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
Trending
அதேசமயம் இந்த தொடரில் இந்திய அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அடுத்தடுத்து இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் என 343 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அவர் ஒரு இடம் பின் தங்கி 4ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட மரிஸான் கேப் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 2 இடங்கள் முன்னேறி 7 மற்றும் 9ஆம் இடங்களை பிடித்துள்ளனர்.
ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தொடர்ந்து 4ஆம் இடத்தில் நீடிக்கிறார். அதேசமயம் இந்திய தொடரில் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்க அணியின் அயபொங்கா காகா ஒரு இடம் முன்னேறி 6ஆம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now