
Wiaan Mulder Record: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் வியான் முல்டர் சதமடித்து அசத்தியுள்ளார்.
ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்க அணி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 6) புலவாயோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு டோனி டி ஸோர்ஸி - லெசெகோ செனோக்வானே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஸோர்ஸி 10 ரன்னிலும், அறிமுக வீரர் செனொக்வானே 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் வியான் முல்டர் மற்றும் டேவிட் பெடிங்ஹாம் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வியான் முல்டர் சதமடித்து அசத்தினார். அதன்பின்னரும் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இரட்டை சதத்தை நோக்கி விளையடி வருகிரார். இந்நிலையில் இப்போட்டியில் வியான் முல்டர் சதமடித்ததன் மூலம் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.