இந்த தோல்விக்கு இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும் - நாசர் ஹுசைன்!
சொந்த மண்ணில் மிரட்டி வரும் இந்தியாவுக்கு முதல் தோல்வியை பரிசளித்து வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்துங்கள் என இங்கிலாந்துக்கு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அடித்து நொறுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடுகிறது. குறிப்பாக முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த அந்த அணி கத்துக்குட்டி வங்கதேசத்துக்கு எதிராக எளிதாக வெற்றி பெற்றது.
ஆனால் அதன் பின் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்த இங்கிலாந்து மும்பையில் தென்னாபிரிக்காவிடம் சரமாரியாக அடி வாங்கி படுதோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட அந்த அணி பெங்களூருவில் நடைபெற்ற 5வது போட்டியில் இலங்கைக்கு எதிராக 156 ரன்கள் மட்டுமே அடுத்து மோசமான தோல்வியை சந்தித்தது.
Trending
அதன் காரணமாக அடுத்த 4 போட்டிகளில் வென்றாலும் மோசமான ரன்ரேட் பெற்றிருப்பதன் காரணமாக இங்கிலாந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது. அதனால் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட தவற விட்டு உள்ள அந்த அணி அடுத்ததாக சொந்த மண்ணில் தொடர்ந்து 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து மிரட்டி வரும் இந்தியாவை அக்டோபர் 29ஆம் தேதி லக்னோவில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்து விட்டதால் குறைந்தபட்சம் சொந்த மண்ணில் மிரட்டி வரும் இந்தியாவுக்கு முதல் தோல்வியை பரிசளித்து வெற்றி கொண்டாட்டத்தை நிறுத்துங்கள் என இங்கிலாந்துக்கு முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் வெளிப்படையான கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கும் இந்த உலகத்திற்கும் இங்கிலாந்து யார் என்பதை காட்ட வேண்டும் என்று தெரிவிக்கும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த தோல்விக்கு இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பேற்க வேண்டும். இருப்பினும் இங்கிலாந்து தற்போது அதிரடியாக விளையாட வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை லக்னோவுக்கு சென்று அங்கே இந்தியாவின் பார்ட்டியை கெடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் எந்தளவுக்கு சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்தியாவுக்கும் இந்த உலகிற்கும் நினைவூட்டுங்கள்.
மேலும் தற்போது இந்த தோல்விக்கு இங்கிலாந்தினர் 50 ஓவர் போட்டிகளில் அதிகமாக விளையாடாமல் ஹண்டர்ட் அல்லது டி20 ப்ளாஸ்ட் போன்ற தொடர்களில் அதிகமாக விளையாடுவதே காரணம் என்ற விமர்சனங்கள் நமது நாட்டில் காணப்படுகின்றன. ஆனால் அதெல்லாம் வெறும் சுமாரான சாக்காகும்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now