
Sri Lankaa squad: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை டெஸ்ட் அணியில் துனித் வெல்லாலகே மற்றும் விஷ்வா ஃபெர்னாண்டோ ஆகியோர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளனர்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதில் தற்சமயம் இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார். தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் துனித் வெல்லாலகே மற்றும் விஷ்வா ஃபெர்னாண்டோ ஆகியோர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். முன்னதாக அந்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஏஞ்சலோ மேத்யூ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில் இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.