
இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரை பல்லகலேவில் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரை கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேற்கொண்டு டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி இத்தொடர் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார்.
ஆனால் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி மீது மிகவும் காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டும் சில வீரர்களுக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அதேசம் தொடர்ந்து சொதப்பிவரும், அணியில் இருந்த நீக்கப்பட்ட மற்றும் நீண்ட் நாள்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த வீரர்கள் என ஒரு சிலருக்காக சிறப்பாக செயல்பட்ட விரர்களை அணியில் இருந்து நீக்கிய குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.