SL vs BAN: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

SL vs BAN, Test Series: வங்கதெச டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் பசிந்து சூரியபந்தாரா, பவன் ரத்நாயக்க, இசித விஜேசுந்தர உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணி இம்மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும் விளையாடவுள்ளது. இதன்மூலம் வங்கதேச அணியானது நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு தரப்பு தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் ஜூன் 17ஆம் தேதி முதல் கலேவில் தொடங்கவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூன் 25ஆம் தேதி கொழும்புவிலும், ஒருநாள் தொடரானது ஜூலை 2ஆம் தேதி முதலும், டி20 தொடரானது ஜூலை 10ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் இதில் ஒருநள் மற்றும் டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்பு, பல்லகலே, தம்புளா உள்ளிட்ட மைதானங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இலங்கை டெஸ்ட் தொடருக்கன வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயம் காரணமாக கடந்த முறை டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காமல் இருந்த லிட்டன் தாஸ், எபோடட் ஹொசைன் உள்ளிட்டோருக்கும் இந்த டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் பசிந்து சூரியபந்தாரா, பவன் ரத்நாயக்க, இசித விஜேசுந்தர உள்ளிட்ட அறிமுக வீரர்களும், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தேர்வுசெய்யப்பட்டும் விளையாட முடியமால் போன லஹிரு உதாரா மற்றும் சோனல் தினுஷா ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து அணுபவ வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். இதில் இந்த டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏஞ்சலோ மேத்யூஸ் அறிவித்துள்ளார். அதேசமயம் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு அங்கமாக இத்தொடர் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இலங்கை டெஸ்ட் அணி: தனஞ்செய டி சில்வா (கேப்டன்), பதும் நிஷங்க, ஓஷதா ஃபெர்னாண்டோ, லஹிரு உதார, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், பசிந்து சூரியபந்தாரா, சோனல் தினுஷா, பவன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய, தரிந்து ரத்நாயக்க, அகில தனஞ்சய, மிலன் ரத்நாயக்க, அசித்த பெர்னாண்டோ, கசுன் ராஜித, இசித விஜேசுந்தர.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், அனாமுல் ஹக் பிஜோய், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்ஃபிக்கூர் ரஹீம், லிட்டன் குமர் தாஸ், மஹிதுல் இஸ்லாம் பூயான், ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் முராத், எபோடட் ஹொசைன் சவுத்ரி, ஹசன் மஹ்மூத், நஹித் ராணா, சையத் கலீத் அகமது
Win Big, Make Your Cricket Tales Now