ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் இலங்கை அணியின் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்க உள்ள நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நடப்புச் சாம்பியனான இலங்கை, ஆசியக் கோப்பை 2023க்கான தங்களது அணியை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில், சீனியர் வீரர் குசல் பெரேரா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி சொந்த நாட்டில் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவது இலங்கைக்கு கூடுதல் நன்மையை பெற்றுத் தரும்.
Trending
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. இந்த ஆசிய கோப்பை தொடரான உலகக் கோப்பை தொடருக்கான ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி 6 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.
2023 ஆசியக் கோப்பையில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தால், அவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கோப்பையில் நுழைவார்கள். ஷனகவின் அணியில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகிய இரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now