ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
![Sri Lanka Drops Wickramasinghe For Australia ODIs, Opts For Spin-heavy Squad ஆஸ்திரேலிய தொடருக்கான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு!](https://img.cricketnmore.com/uploads/2025/02/sri-lanka-drops-wickramasinghe-for-australia-odis-opts-for-spin-heavy-squad-mdl.jpg)
ஆஸ்திரேலியா அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இலங்கை - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது பிப்ரவரி 12ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் கடைசி ஒருநாள் தொடர் இது என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
Trending
இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிம் இடம்பிடித்திருந்த கேப்டன் பாட் கம்மின்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் காயம் காரணமாக விலகியதை அடுத்து, ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கொண்டு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையி இத்தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. சரித் அசலங்கா தலைமையிலான இந்த அணியில் பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் நியூசிலாந்து தொடரில் விளையாடிய சமிந்து விக்ரமசிங்கா இந்த அணியில் இருந்து நீக்கப்பட்டு, துனித் வெல்லாலகே சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர்த்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்களாக வநிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வண்டர்சே ஆகியோரும், வேகப்பந்து வீச்சாளர்கள் அசிதா ஃபெர்னாண்டோ, லஹிரு குமார் ஆகியோருடன் முகமது ஷிராஸ், ஈஷான் மலிங்கா ஆகியோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். அவர்களுடன் சரித் அசலங்கா மற்றும் வெல்லாலகே ஆகியோரும் சுழற்பந்துவீச்சில் அணிக்கு உதவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, நிஷான் மதுஷ்கா, நுவநிந்து ஃபெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, துனித் வெல்லாலகே, ஜெஃப்ரி வான்டர்சே, அசித ஃபெர்னாண்டோ, லஹிரு குமார, முகமது ஷிராஸ், எஷான் மலிங்கா.
Win Big, Make Your Cricket Tales Now