-mdl.jpg)
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை முதல் டெஸ்ட் போட்டியிலும், செப்டம்பர் 26 முதல் 30ஆம் தேதிவரையிலும் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் கலேவில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடருக்கன் நியூசிலாந்து அணி கடந்த மாதமே அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் இலங்கை டெஸ்ட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்திருப்பதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இப்போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் ரமேஷ் மெண்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.