
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 18 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை பிரதிகா ராவலும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ஹர்லீன் தியோலும் 29 ரன்களுடன் விக்கெட்டை இழந்தர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணை சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 30 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 37 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த நிலையில் ரிச்சா கோஷும் விக்கெட்டை இழந்தார்.