
நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இலங்கை அணியானது இரண்டிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (நவ.19 )பல்லகலே சர்வதெச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றுள்ளதன் காரணமாக, இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றவும், இப்போட்டியில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றியை தேட முயற்சிக்கும் என்பதாலும் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன.
அதன்படி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு டிம் ராபிசன் - வில் யங் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வில் யங் ஒருபக்கம் ரன்களைச் சேர்த்த நிலையில், மறுபக்கம் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் டிம் ராபின்சன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.