
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இந்த சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அந்தவகையில் இத்தொடரின் புள்ளி பட்டியலில் இந்திய அணி 62.82 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.
அதனைத்தொடர்ந்து இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியானது 54.17 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், நியூசிலாந்து அணி 50 புள்ளிகளுட்ன் இப்பட்டியலில் 5ஆம் இடத்திலும் தொடர்ந்து வருகின்றன. இதனால் புள்ளிப்பட்டியலில் எந்த இரண்டு அணிகள் டாப் இடங்களைப் பிடித்து இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே எழத்தொடங்கியுள்ளன.
அதன் ஒருபகுதியாக இம்மாத இறுதியில் ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது நவம்பர் 15 தொடங்கும் இத்தொடரானது அடுத்த ஆண்டு ஜனவரி 06ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.