
Sri Lanka's Thisara Perera Announces Retirement From International Cricket (Image Source: Google)
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா. இவர் இலங்கை அணிக்காக இதுவரை 166 ஒருநாள், 84 டி20 , 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 ஆயிரம் ரன்களையும், 237 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
அதேசமயம் 2014ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் 32 வயதேயான திசாரா பெரேரா இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இத்தகவலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது.