
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி காலை 7.50 மணிக்கு தொடங்கும். இதற்காக இரு அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பான சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மித் 89 ரன்கள் எடுத்தால், ஆஸ்திரேலியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மார்க் வாக்கை முந்தி ஆறாவது இடத்தை அடைவார். அதன்படி, மார்க் வாக் ஆஸ்திரேலிய அணிக்காக 372 போட்டிகளில் 445 இன்னிங்ஸ்களில் விளையாடி 16,529 ரன்கள் எடுத்துள்ளார்.
அதேசமயம் ஸ்டீவ் ஸ்மித் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 341 போட்டிகளில் 399 இன்னிங்ஸ்களில் விளையாடி 16,441 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, இப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடிக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை பின்னுக்கு தள்ளுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.