
ஜிம்பாப்வே அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தன.
இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் போட்டியானது நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மே 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்தாண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கயத்தை சந்தித்த பென் ஸ்டோக்ஸ் அதன்பின் கிட்டத்திட்ட 5 மாதங்களாக எந்தவொரு போட்டிகளிலும் பங்கேற்காமல் விலகி வந்தார். மேற்கொண்டு காவுண்டி தொடரில் டர்ஹாம் அணிக்காகவும் அவர் எந்தவொரு போட்டிகளிலும் விளையாடமால் இருந்த நிலையில், தற்போது காயத்தில் இருந்து மீண்டதுடன் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.