Advertisement

இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி!

இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் மூலமாக ஐசிசி ஸ்டாப் வாட்ச் விதிமுறை அமலுக்கு வருகிறது.

Advertisement
இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி!
இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 12, 2023 • 01:47 PM

ஐசிசி புதிய விதிமுறையாக ஸ்டாப் வாட்ச் விதிமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த விதிமுறையானது சோதனை முறையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் வரும் ஏப்ரல் 2024 ஆம் ஆண்டு வரையில் இந்த விதிமுறை அமலில் இருக்கும். இந்த விதிமுறையின்படி, போட்டியில் பந்து வீசும் அணி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச 60 நொடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 12, 2023 • 01:47 PM

அதற்கு மேல் எடுத்துக் கொண்டால், நடுவர்களால் 2 முறை எச்சரிக்கை கொடுக்கப்படும். மூன்றாவது முறையும் 60 நொடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் எதிரணிக்கு பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்படும் என்று புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த விதிமுறையானது இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் மூலமாக அமலுக்கு வருகிறது.

Trending

இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், “ஸ்டாப் வாட்ச் விதிமுறையானது போட்டி நேரத்தை குறைத்து விரைந்து போட்டியை முடிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை. ஒரு ஓவருக்கும், அடுத்த ஓவருக்கும் இடையிலான பந்து வீச்சு நேரத்தை குறைக்கும் வகையில் இந்த ஸ்டாப் வாட்ச் விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement