Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவிடம் மண்ணை கவ்விய நியூசிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 14, 2023 • 09:53 AM
Stunning South Africa smash New Zealand to save World Cup campaign
Stunning South Africa smash New Zealand to save World Cup campaign (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடந்து வருகிறது. இதில், நேற்று நடந்த குரூப் பி பிரிவுகளுக்கான போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியும், நியூசிலாந்து மகளிர் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டிரையன் மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Trending


இதையடுத்து, எளிய இலக்கை நோக்கிய விளையாடிய நியூசிலாந்து மகளிர் அணியில் ஒவ்வொருவரும் 0, 10, 12, 1, 4, 7 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து 67 ரன்கள் மட்டுமே எடுத்து, 65 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் எம்லாபா 3 விக்கெட்டுகளும், காப் மற்றும் டிரையன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதற்கு முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் நியூசிலாந்து அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை தழுவியது. குரூப் ஏ பிரிவில் புள்ளிப் பட்டியலில் இலங்கை அணியும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணியும் தலா 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளன. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement