
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி 151 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இதில் டாப் வரிசையில் முதல் நான்கு வீரர்கள் 16 ரன்களை கூட தொடவில்லை. கேப்டான் ரோஹித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் புஜாரா, விராட் கோலி ஆகியோரு 14 ரன்களிலும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்த நிலையில் இந்திய அணியை வெளுத்து வாங்கிய சுனில் கவாஸ்கர், பேட்ஸ்மேன் தவறால்தான் ஆஸ்திரேலியாவுக்கு விக்கெட் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “கில் சிறப்பான ஃபார்மில் இருந்தார். அவரை இந்திய அணி இழந்தது நிச்சயம் பெரிய இடி தான். இந்திய வீரர்கள் பந்தை தவறாக கணித்து ஆட்டம் இழந்தார்கள். ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலே நன்றாக விளையாடவில்லை. இதனால் அவர் ஆட்டம் இழந்தது குறித்து எனக்கு பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால் புஜாரா ஸ்டெம்பை கூட சரியாக மறைத்து விளையாடாமல் போல்டானது அதிர்ச்சி அளிக்கிறது.