
Sunil Gavaskar names batter who can replace Virat Kohli as India's new Test captain (Image Source: Google)
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி நேற்று மாலை டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த சில தினங்களில் கோலி இப்படி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து விராட் கோலி அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்தும் கேப்டன் பதவியைத் துறந்தது குறித்து பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்பட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார்.