
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாவது சீசனுக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் முன்னேறியுள்ளன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப்போட்டி வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அழிக்குகூடிய ஒன்றகாக ஐபிஎல் தொடரில் கலக்கிவரும் அஜிங்கியா ரஹானேவுக்கு இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரன் குவிக்க முடியாமல் தவித்ததால் அதிரடியாக கழற்றி விடப்பட்ட அவர் கடந்த ரஞ்சி கோப்பையில் இரட்டை சதமடித்து ஃபார்முக்கு திரும்பி 2023 ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டில் சரவெடியாக வித்தியாசமான ஷாட்டுகளை விளையாடி முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
அதனால் ஏற்கனவே இந்திய மண்ணில் விட வெளிநாட்டு மண்ணில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஃபார்மின்றி தடுமாறும் சூரியகுமார் ஆகியோருக்கு பதிலாக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதை வரவேற்கும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் ஐபிஎல் மட்டுமல்லாமல் ரஞ்சி கோப்பையிலும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதாலயே ரஹானே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாராட்டியுள்ளார்.