இப்போதெல்லால் 200 ரன்கள் என்பது சாதாரணமாகிவிட்டது - ஸ்ரேயாஸ் ஐயர்!
கடந்த சில போட்டிகளை எடுத்துக் கொண்டால், 200 ரன்கள் என்பது சாதாரண ஸ்கோராக மாறிவிட்டது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அதன்படி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் இறுதியில் குல்தீப் யாதவ் சிறப்பாக விளையாடிய 35 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்தது. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 68 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். இறுதியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 26 ரன்களையும் சேர்க்க, 16.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
Trending
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய கேகேஆர் அணி ஸ்ரேயாஸ் ஐயர், “கடந்த சில போட்டிகளை எடுத்துக் கொண்டால், 200 ரன்கள் என்பது சாதாரண ஸ்கோராக மாறிவிட்டது. இந்த போட்டியில் பவர்பிளேக்குப் பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவ ஆரம்பித்தது. அதன் காரணமாக இப்போட்டியில் எவ்வாறு செயல்படுவது குறித்து எங்களுக்கு ஒரு யோசனை கிடைத்தது.
எங்கள் அணியில் நடக்கும் அணி அலோசனை கூட்டத்தில் சுனில் நரைன் பங்கேற்கவில்லை. ஆனால் பிலிப் சால்ட் எப்போதும் அங்கேயே இருப்பார், அவருடைய உள்ளீடுகளை எங்களுக்குத் தருகிறார், மேலும் அவர் வந்து இதையெல்லாம் செய்வதைப் பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் சுனில் நரைன் கூட்டத்தில் பங்கேற்கும் மாறு வற்புறுத்தமாட்டேன். மேலும் வருண் சக்ரவர்த்தி கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆனால் இன்றைய தினம் அவரது பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நாங்கள் இத்தொடரின் முதல் போட்டியில் இருந்தே அனைத்தையும் கவனித்து வருகிறோம். அதனால் இதுபோன்ற ஆட்டங்களை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக வெற்றிபெற வேண்டும் என எண்ணினோம். நாங்கள் எங்கள் அணியின் வெற்றி குறித்து மட்டுமே அதிகம் யோசித்து வருவதால் புள்ளிப்பட்டியலின் இடம் குறித்து அதிகம் யோசிப்பதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now