
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டாப் 8 அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் காயம் காரணமாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மாற்று வீரர்களை இந்திய அணி தேர்வு செய்துள்ளதால் அவர்களின் செயல்படுகல் எவ்வாறு இருக்கும் என்றும், இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை டாப் ஆர்டர் வீரர்களாக சேர்த்துள்ளார். அதன்பின் அவர் ரிஷப் பந்தை 5ஆவது இடத்தில் தேர்வு செய்ததுடன் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் தேர்ந்தெடுத்தார்.