
Suryakumar Continues To Lead The Latest T20I Batting Rankings (Image Source: Google)
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் 5 இன்னிங்ஸில் 3 அரை சதங்கள் அடித்த இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள டி20 தரவரிசையிலும் பேட்டர்களுக்கான பிரிவில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் 239 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் - 189.68. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், 12ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் பேட்டர்களுக்கான டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஸ்வான், பாபர் ஆஸம், கான்வே, மார்க்ரம் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளார்கள்.அதேபோல் இந்திய வீரர் விராட் கோலி தொடர்ந்து 11ஆவது இடத்தில் நீடித்து வருகிறார்.