
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக்கேப்டன் சூர்யகுமார் யாதவ் வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 23 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் 4 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்து அசத்தி இருந்தார். இந்நிலையில் இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 25 ரன்களைக் கடந்ததன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் தொடர்ச்சியாக 11 இன்னிங்ஸ்களில் 25 அல்லது அதற்கு மேல் ரன்கள் எடுத்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா தொடர்ச்சியாக 10 முறை 25+ ஸ்கோர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது சூர்யகுமார் யாதவ் முறியடித்து அசத்தியுள்ளார். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ் 475 ரன்களைக் குவித்து அதிக ரன்களை எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.