
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருந்த ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது மற்றும் 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஆனால், 4ஆவது டெஸ்ட் போட்டியில் 3ஆம் நாள் ஆட்டத்திற்கு அவர் களமிறங்க வரவில்லை. இதையடுத்து, முதுகு வலி காரணமாக அவர் எஞ்சிய நாட்களில் விளையாட வரவில்லை. டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் விலகினார்.
இதன் காரணமாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம் பெற்றார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். முதல் முறையாக டக் அவுட்டில் வெளியேறினார். இதே போட்டி நேற்று நடந்த 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் அவர் கோல்ட டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் காரணமாக அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கருத்து எழுந்தது. இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்விற்கு ஆதரவு தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சூரியகுமார் யாதவிற்கு டி20 போட்டிகளிலும் அப்படிப்பட்ட பந்தை வீசியிருந்தால் அவர் அவுட்டாகி இருப்பார். மிச்சல் ஸ்டார்க் வீசிய அபாரமான பந்து அது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாத நேரத்தில் பேக்கப் வீரராகவே சூர்யகுமார் அணியில் இருக்கிறார். இன்னும் தொடர்ச்சியானவாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.