
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். ஆனால் சமீபகாலங்களில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் அவர் கடைசியாக விளையாடிய 10 இன்னிங்ஸில் ஒரு அரைசதத்தை மட்டுமே அடித்துள்ளார். மேலும் இத்தொடரிலும் அவர் 0,12,14 ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளார்.