
18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் லிக் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றியில் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மாவும் முக்கிய பங்கு வகித்தார். அதிலும் குறிப்பாக அவர் தனது பந்துவீச்சில் கேகேஆர் அணியின் அபாயகரமான பேட்டர் ஆண்ட்ரே ரஸலின் விக்கெட்டை கைப்பற்றி, அந்த அணியின் ரன் வேகத்தைக் குறைத்தார். அதன்படி இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை சுயாஷ் சர்மா வீசிய நிலையில், அதனை ஆண்ட்ரே ரஸல் எதிர்கொண்டார்.
அப்போது அந்த ஓவரின் மூன்றாவது பந்தை சுயஷ் சர்மா வைடராக வீசிய நிலையில் ஆண்ட்ரே ரஸல் பாய்ண்ட் திசையில் பவுண்டரி அடித்து மிராட்டினார். ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்த பந்தை சுயஷ் சர்மா கூக்ளியாக வீச அதனை கணிக்க தவறிய ரஸல் பந்த தவறவிட்டதுடன் க்ளீன் போல்டாகினார். இதனால் இப்போட்டியில் அவர் 4 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.