பேட்டர்களை யார்க்கரால் ஸ்தம்பிக்கவைத்த கியூட்டா - வைரல் காணொளி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் உகாண்டா அணி வேகப்பந்து வீச்சாளர் காஸ்மஸ் கியூட்டாவின் அபாரமான யார்க்கர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கயானாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்து அசத்தியது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 44 ரன்களையும், ஆண்ட்ரே ரஸல் 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்து அசத்தினர். உகாண்டா அணி தரப்பில் கேப்டன் பிரையன் மசபா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடி வரும் உகாண்டா அணியானது 25 ரன்களுக்குள்ளாகவே 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
Trending
இந்நிலையில் இப்போட்டியில் உகாண்டா அணி வேகப்பந்து வீச்சாளர் காஸ்மஸ் கியூட்டா அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன், தனது துள்ளியமான யார்க்கரின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களுக்கு ஆட்டம் காட்டினார். அதிலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 22 ரன்களைச் சேர்த்திருந்த ஷெர்ஃபேன் ரதர்ஃபோர்ட்டை தனது யார்க்கரின் மூலம் க்ளீன் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார்.
அதன்படி, இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை வீசிய காஸ்மஸ் கியூட்டா, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை துல்லியமான யார்க்கராக வீசினார். இதனைச் சற்றும் எதிர்பாராத ரதர்ஃபோர்ட் பந்தை தடுக்க முடியாமல் நிலை குழைந்து தடுமாற, பந்தும் ஸ்டம்புகளை பதம்பார்த்தது. இதன் காரணமாக 22 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அவர் பெவிலியன் திரும்ப வேண்டியானது. இந்நிலையில் இந்த விக்கெட் குறித்த காணொளியானது வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now