புவனேஷ்வரின் மெய்டன் சாதனையை முறியடித்த பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்களை வீசிய இந்திய வீரர் எனும் புவனேஷ்வர் குமாரின் சாதனையை ஜஸ்ப்ரித் பும்ரா முறியடித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச முடிவுசெய்து அயர்லாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணியானது இந்திய அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதிலும் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், கர்டிஸ் காம்பேர், ஜார்ஜ் டக்ரேல் உள்ளிட்ட வீரர்கள் பெரிதளவில் ரன்களை சேர்க்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
Trending
அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கரேத் டெலானி 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 25 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அயர்லாந்து அணியானது 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா 3 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், ஒரு மெய்டன் ஓவரையும் வீசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.
Most Maiden Overs in T20I
— (@Shebas_10dulkar) June 5, 2024
(full member teams)
11 - Jasprit Bumrah*
10 - Bhuvneshwar Kumar #INDvsIRE pic.twitter.com/0yomm38QdU
அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசியவர்கள் பட்டியளில் புவனேஷ்வர் குமார் 10 மெய்டன்களை வீசி முதலிடத்தில் இருந்த நிலையில், இன்றைய போட்டியில் பும்ரா வீசிய மெய்டன் ஓவரைச் சேர்த்து 11 மெய்டன் ஓவர்களை வீசி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now